ஓர் அவசரச் செய்தி -- பாகிஸ்தான் 65 / 6 !!
இன்று தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் 3-வது டெஸ்ட் போட்டியில், இர்·பான் பதான் தனது முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி (HATRICK) சாதனை படைத்துள்ளார் !!!! வீழ்ந்த மூவரில், யூனுஸ் கானும், யூசுபும் தொடர்ந்து இந்தியாவுக்கு (முதல் 2 டெஸ்ட்களில்) தொல்லை கொடுத்து வருபவர்கள்.
சல்மான் பட் டிராவிட்டிற்கு காட்ச் வழங்கியும், யூனுஸ் LBW ஆகியும், மொஹமட் யூசுப் Clean Bowled ஆகியும் (மூவரும் ரன் எடுக்காமலேயே) விக்கெட்டுக்களை இழந்தனர் !!!
அடுத்து, சகீர் கான் தன் பங்குக்கு 2 விக்கெட்டுக்களை (பைசல் இக்பால் மற்றும் அபாயகரமான ஷாஹித் அப்ரிடி ஆகியோரை) வீழ்த்தினார். அப்ரிடி, கண்ணை மூடிக் கொண்டு அடிக்கப் போய் Clean Bowled ஆனது பார்க்க அம்சமாய் இருந்தது !!!
இறுதியாக, தொடக்க ஆட்டக்காரராக வந்து சற்று தாக்கு பிடித்து வந்த இம்ரான் ·பரட், இளம் பந்து வீச்சாளர் RP சிங் பந்து வீச்சுக்கு விக்கெட்டை இழந்தார்.
இந்தியா டாஸில் வென்றது நல்லதாகப் போயிற்று !!! கராச்சியின் Green Top ஆடுகளம், பாகிஸ்தானுக்கு (ஒரு மணி நேரத்திலேயே!) பலிபீடமாகிப் போனது !! எப்படியோ இந்தியா வெற்றி பெற்றால் சரி தான் !!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
இந்தியா 165/6 ரன்கள். கங்குலி, யுவராஜ் அவுட்.
தோனி ஆடுகிறார்.
மொத்தம் 100+ ரன்கள் அடித்தால் நன்றாக இருக்கும். செய்வார்களா?
காகா ப்ரியன், பரஞ்சோதி,
நன்றி !
அதான் நம்ம ஆட்கள் கடைசியா கவுத்துட்டாங்களே :-(
டிராவிட்டும் சச்சினும் இப்படி கழுத்தறுப்பாங்கன்னு எதிர்பார்க்கல !!!!
bala you can find our great batsmen after they get out in this blog
பாலா,
நலமா?
I have tagged you here
Please continue the chain if you have time
கோபி,
இல்லற வாழ்க்கை இனிதே செல்கிறதல்லவா.
அலுவலகத்தில் கொஞ்ச காலமா அதிக டென்ஷன் !!! அதான், வலைப்பதிவுகள் பக்கம் தலை காட்ட முடியவில்லை.
என்னை ஞாபகம் வைத்து பதிய அழைத்தமைக்கு என் நன்றிகள். பிறகு வந்து நீங்கள் கேட்டதைப் பதிகிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment